தனுஷின் அசுரன் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்!

4 May 2021, 3:28 pm
Quick Share

ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகை அம்மு அபிராமி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தளபதி விஜய்யின் பைரவா படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்திருந்தவர் நடிகை அம்மு அபிராமி. இந்தப் பட த்தைத் தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் நவரசா என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்தப் படம் கொடுத்த அமோக வரவேற்பு காரணமாக அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அசுரன் பட த்திற்கு சிறந்த துணை நடிகைக்கான JFW Movie Awards விருது பெற்றார். இந்த நிலையில், தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவதோடு, பலியாகியும் வருகின்றனர். அண்மையில், இயக்குநர் கே வி ஆனந்த் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து கொரோனாவிற்கு சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகை அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், வீட்டிலேயே இருங்கள், மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாகவும், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Views: - 89

0

0