மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா Positive ! திடுக்கிடும் தகவல் !

20 October 2020, 2:40 pm
Quick Share

மலையாள சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் செம்ம Famous. இவர் முதலில் நந்தனம் என்னும் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு புதியமுகம், இந்தியன் ருப்பி, பாவாடை, விமானம், ஐயப்பனும் கோஷியும் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் இயக்குநராக மோகன்லாலை வைத்து முதன்முதலாக இயக்கிய லூசிபர் என்ற படம் மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட்டானது. தமிழில் கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன், காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜனகணமன என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கும் இவர், அந்த படப்பிடிப்பு தளத்தில் வைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் நடிகர் பிருத்விராஜுக்கும், டைரக்டர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனே தன்னை தானே தனிமை படுத்தி இருக்கிறார் பிரித்வி.

Views: - 19

0

0