ஓ…ஓஹ் அவ்வளவு அன்யோன்யமா பழகுறீங்களா? விஜய்யின் சட்டை அணிந்து வந்த ராஷ்மிகா!
Author: Shree27 July 2023, 11:48 am
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
இவர்கள் இருவரும் ரகசியமாக காதலி வருகிறார்கள். அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும். சில நாட்களுக்கு முன்னர் கூட மாலத்தீவில் ராஷ்மிகா விஜய் தேவ்ராகொண்ட இருவரும் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட ஒரே லொகேஷன் போட்டோ வெளியாகி வசமாக சிக்கிக்கொண்டார்.
அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், சில நாட்களுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா அணிந்துவந்த சட்டையை நடிகை ரஷ்மிகா மந்தனா அணிந்து வந்து மீண்டும் ரகசிய உறவில் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். இருவரது புகைப்படத்தை ஒன்றாக இணைத்து நெட்டிசன்ஸ் நல்லா சம்பவம் செய்து வருகிறார்கள். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.