புகழ் வீட்டில் குவா குவா சத்தம்.. பென்ஸி-க்கு குழந்தை பொறந்தாச்சு.. அவரே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
28 September 2023, 11:00 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

குறிப்பாக குக் வித் கமலி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அண்மையில், கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது. இந்த நிலையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தையின் கால் புகைப்படத்துடன் அவரே இந்த சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!