நாள் ஒரு நட்சத்திரம் : நகைச்சுவைகளுக்கு அரசனான வடிவேலு..!

12 September 2020, 9:22 am
Quick Share

நாளத்தில் நகைச்சுவயை ஓடவிட்டு பாவனையில் பல கலைகளை உணர்ந்தும் வைகையின் புயலை வரவேற்று இன்றைய நாள் ஒரு நட்சத்திரம் தொடங்குகிறது.

ஓவியம் வரைவது ஒருகலை, காவியம் எழுதுவது ஒருகலை என மனிதனின் கண் ரசிக்கும் விதத்தில் கலைகளின் பரிணாமம் மாற்றம் பெற்றுக்கொண்டேதான் போகிறது.

ஆனால், மனிதன் தன் கவலைகளை மறந்து சிறிக்க வேண்டும் என்றால் ஒரு நகைச்சுவை வேண்டும்.. அந்த நகைச்சுவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கலைஞன், கவலையில் இருப்பவர்களுக்கு அந்த நேரம் கடவுளாகவே தெரிவான்.

சார்லி சாப்லின் முதல் பழமை நடிகர் நாகேஷ் என இன்றளவும் மக்களால் இவர்களின் நகைச்சுவைக்கு வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையை தனது முக பாவனையால் கட்டிப்போட்டவர் நடிகர் வடிவேலு.

என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமான வடிவேலு… என்பதுகளில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, சேந்தில் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ” அந்த கொடுமைய என் வாயால எப்பினே சொல்லுவேன்..உங்க கிட்ட சொல்லாம இந்த நாய் யார்டே னே போயி சொல்லும்” என்ற வடிவேலுவின் சிங்கிள் டைலாக் திரையரங்கில் இருந்தவர்களை குலிங்கி குலிங்கி சிரிக்க வைத்தது.

அதை தொடர்ந்து, வடிவேலுவின் நகைச்சுவை பயணம் தமிழ் திரைப்படங்களில் மறுக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. நடிகர் ரஜினி, விஜய், சூர்யா என வடிவேலுவுடன் நடிக்காத நடிகர்களே இருக்க முடியாது என்ற நிலை தமிழ் திரைப்படங்களில் உருவானது.

அவரின்..ஆஹான் என்ற ஒற்றை வார்த்தை போதும் ரசிகர்களை சிகிக்க வைக்க.. அத்துடன் அவரின் முக பாவனை அசாத்தியமானது. டைலாக்குகள் இன்றி தனது பாவனையால் மட்டுமே நகைச்சுவையை பிரதி பலிக்கும் வலிவேலு நகைச்சுவை திரையுலகின் ஜாம்பவான் என்றால் அது மிகையாகாது.

இது மட்டுமா..இன்று அரசியல் என்றாலும் செரி, ஆன்மீகம் என்றாலும் செரி.. அட அட்வைஸ் என்றாலும் கூட செரி.. அனைத்திற்கும் நெட்டிசன்கள் மீம்களை தெறிக்க விடுகின்றனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் முகம் யாருடையது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அளவுக்கு வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் உலகம் எங்கும் கொட்டி கிடக்கின்றனர்.

இங்கு தல அஜித்துக்கும், தளபதி விஜயிக்கும் ரசிகர்களாக உள்ள அனைவரும் வடிவேலுவின் ரசிகர்களாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையை வடிவேலு தனது நகைச்சுவை ஆட்சியின் மூலம் அம்பலப்படுத்தி விட்டார். மதுரைக்கு மல்லிகை பேமஸ் என்றால் வகை நதிபோல் அள்ளிக்கொண்டு வரும் நகைச்சுவைக்கு வடிவேலுவும் ஃபேமஸ்தான்.

இப்படி நகைச்சுவையையே திருவுருவமாக கொண்டு உலக மக்களை தனது நகைச்சுவை சிந்தனையால் சிரிக்க வைக்கும் வைகை புயல் வடிவேலு… ஒப்பற்ற கலைஞன் என்பதில் அந்த வார்த்தைக்கே பெருமை சேர்கிறது. இன்றைய நாள் ஒரு நட்சத்திரம் கதை நகைச்சுவை அரசனை வாழ்த்தி முடிகிறது.

Views: - 0

0

0