வயசான தாத்தாவை கட்டிப்பிடிச்சு Happy போஸ் – வெளிநாட்டில் அலப்பறை பண்ணும் டிடி!

Author: Shree
18 April 2023, 12:09 pm

கவனம் ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 38 வயதாகும் DD இன்னும் அழகு மாறாமல் அதே இளமையுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக எதையேனும் பதிவிட்டு வரும் அவர் தற்போது இத்தாலிக்கு ட்ரிப் சென்றுள்ள டிடி அங்கு பழம்பெரும் இத்தாலிய மாடலான Mr.Franco உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பெருமையுடன் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!