இதுதான் பேய் படமா? ஏமாற்றத்தில் திரும்பும் ரசிகர்கள்! டிடி நெக்ஸ்ட் லெவலுக்கு இப்படி ஒரு நிலைமையா?
Author: Prasad16 May 2025, 1:35 pm
வெளியானது டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் கதாநாயகனாக நடித்து பிரேம் ஆனந்த் இயக்கிய “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் சந்தானத்துடன் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார்.

இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் தொடர்ச்சிதான் இத்திரைப்படம். இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் காலை முதல் காட்சி சென்று பார்க்கத் தொடங்கினர். “தில்லுக்கு துட்டு”, “டிடி ரிட்டன்ஸ்” போன்ற திரைப்படங்களை போலவே இத்திரைப்படமும் காமெடி ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
பேய் படம்னு நினைச்சி வந்தீங்கனா அவ்வளவுதான்!
இந்த நிலையில் இன்று காலை முதல் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலர் யூட்யூப் சேன்னல்களிடம் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் ரசிகை, “இந்த படத்தை குழந்தைகள் ரசித்து பார்ப்பார்கள். ஆனால் பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றோருக்கு இத்திரைப்படம் செட் ஆகாது. பேய் படம் என்று நினைத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா விமர்சகர்கள் பலரையும் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்கள். எனினும் படம் காமெடியாக இருக்கிறது” என கூறினார்.
மேலும் பேசிய மற்றொரு ரசிகர், “படம் நன்றாகவே இல்லை. ஆனால் நகைச்சுவையாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்” என கூறினார். இது போல் முதல் காட்சி கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன.