ஆண்ட்ரியாவுடன் கசமுசா… Anirudh-கிட்ட அத கேட்க சொல்லி திட்டினாங்க – Anchor தொழிலின் ரகசியத்தை உடைத்த டிடி!

Author: Shree
19 August 2023, 3:25 pm

உருவத்திற்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லை என எல்லோரும் அனிருத் திறமை பார்த்து மெர்சிலிர்த்து போனார்கள். சூப்பர் ஸ்டாரின் உறவுக்காரராக இருந்தாலும் தன் திறமையால் பெரிய நட்சத்திர நடிகர்களையே கால்ஷீட்டிற்காக காத்திருக்க வைத்தார்.

ஆம், அனிருத்தின் எண்ட்ரி அப்படித்தான் இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என தனுஷ் தங்கிலீஸில் வரிகளை எழுதி கொடுக்க, அதற்கு அனிருத் போட்ட மெட்டு உலகம் முழுவதும் வைரல் ஆனது. எண்ட்ரி ஆன முதல் பாட்டிலேயே ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கி விட்டார் அனிருத். மேலும், ‘நீ பார்த்த விழிகளில் கரையவும் ‘போ நீ போ’பாடலில் உருகவும் வைத்தார். இவரை விட கூடாது என ஒட்டுமொத்த சினிமா தயாரிப்பாளர்களும் அனிருத் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தார்கள்.

தற்போது கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தான். பெரிய நடிகர்கள் படங்களே நோ சொல்லும் அளவிற்கு படு பிசியாக இருந்து வருகிறார். ஆம், திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தவிர வெளிநாடுகளுக்கு சென்று கான்சர்ட் நடத்தி வரும் அனிருத் அதில் பல கோடிகள் சம்பாதிக்கிறாராம். ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 100 கோடி சம்பாரித்துள்ளார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தன் திறமையின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலம் ஆன அனிருத் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என்பது தெரிந்த ஒன்று தான். ஆம், பல நடிகைகளுடன் வர தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். நெருக்கமாக இருந்த ரகசிய புகைப்படங்கள் கூட சுச்சி லீக்ஸில் வெளியானது. அதில் முக்கியமானவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் அந்த புகைப்படம் குறித்து தொகுப்பாளினி டிடி அனிருத் அவர்களை நேர்காணல் செய்தபோது அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என்கிட்ட அந்த விஷயத்தை பற்றி கேளு கேளுன்னு சொல்லி திட்டினாங்க. ஆனால் நான் கடைசி வரைக்கும் அந்த கேள்வியை அவரிடம் கேட்கவே இல்லை.

காரணம் அந்த ஒரு கேள்வியால் நிகழ்ச்சி முகம் சுளிக்கும்படி இருக்கக்கூடாது பிரபலத்தை வைத்து FUN ஆக தான் நிகழ்ச்சியை கொண்டுசெல்லவேண்டும். அவ்வளவு ஏன்… அந்த கேள்விக்கு சம்மந்தப்பட்ட நபரான அனிருத்தே ஓகே சொல்லிட்டார் நீ கேளு என்று சொன்னார்கள். நான் அப்போகூட கேட்கவே இல்லை. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனிருத் என்னிடம், நீங்கள் மிகச்சிறந்த தொகுப்பாளி என கூறி வாழ்த்திவிட்டு சென்றார் என டிடி நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!