கட்டிப்பிடித்த விஜய்.. அந்த அணைப்புக்கு என்ன அர்த்தம்?.. வைரலாகும் பிரபல விஜேவின் பதிவு..!

Author: Vignesh
4 November 2023, 11:30 am

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். அந்த வகையில், படம் வெளியான 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை DD தான் தொகுத்து வழங்கி இருந்தார். விஜய் மேடைக்கு வரும்போது டிடிஐ கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அனைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் இங்கே அமைதியாக தோன்றலாம் ஆனால் உள்ளே நான் விஜய் சார் நன்றி என்று டிடி பதிவிட்டுள்ளார்.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?