“மாஸ்டர் படம் பார்த்தால் அது ஒரு தற்கொலை முயற்சி” – பரபரப்பை கிளப்பிய முகநூல் பதிவு !

Author: Udayaraman
5 January 2021, 9:42 pm
Quick Share

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடனே திறக்கப்பட வேண்டும் என்ற விதி முறையால் படம் ஏதும் வெளிவராமல் இருந்தது. ஆல் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பால் குஷியாக இருந்த ரசிகர்களுக்கு தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளை. நிரப்பிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மேலும் கொண்டாட்டத்தை தந்தது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷி அடைந்திருந்தாலும், இது மோசமான ஆபத்தை விளைவிக்கும் என அரவிந்த் சுரேஷ் என்ற டாக்டர் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில் ” என் மதிப்பிற்குரிய விஜய் சிம்பு மற்றும் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நாங்கள் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர் கொரோனாவிற்கு எதிராக போராடி மிகவும் சோர்வாக இருக்கிறோம். இந்த வைரஸில் இருந்து காப்பாற்ற எங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறோம். எங்கள் கண் முன் தெரியாத ஒரு வைரஸை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் முன்னால் எந்த கேமராவும் இல்லை, நாங்கள் ஸ்டன்ட் செய்யும் எந்த ஹீரோவும் இல்லை. அப்படி இருந்தும் மிகவும் போராடி வருகிறோம்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை. இன்னும் சிலர் அதனால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், சிலர் பலியாகி வருகின்றனர். இந்த நேரத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருப்பது ஒரு தற்கொலை முயற்சி. இந்த அறிவிப்பு வெளியிட்டவர்களோ, படத்தின் ஹீரோ கூட்டத்தோடு கூட்டமாக வந்து படத்தை பார்க்கப் போவதில்லை. வருமானத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம்.

கொரோனா தொற்று நோய் உருமாறி பரவி வருவதால் இத்தகைய முடிவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும் நடிகர் அரவிந்த் ஸ்வாமி “திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே அனுமதி அளிப்பது நல்லது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 60

0

0