கொலை மிரட்டல்… உறவில் இருந்த திலீப் சுப்பராயன்.. ஆதாரத்தை நீட்டிய இன்ஸ்டா இலக்கியா.. பரபரப்பில் கோலிவுட்!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2025, 5:06 pm
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு, இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். 6 ஆண்டுகளாக அவருடன் இருந்தேன். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதைக் கேட்டால் என்னை அடிப்பார்” என பதிவிட்டு, திலீப் சுப்பராயனின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலானதும், இலக்கியா அதை நீக்கிவிட்டார். அதன்பின், அவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாகவும், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மருத்துவர்கள் கூறுகையில், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு மீறி உட்கொண்டதால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இலக்கியாவின் தற்கொலை முயற்சிக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் காரணம் என்று செய்திகள் பரவின.

ஆனால், இலக்கியா பின்னர் “எல்லாமே பொய்யான செய்தி” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது உடல்நலம் தேறிய இலக்கியா, மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், “என்னை மிரட்டித்தான் எல்லாமே பொய் என பதிவிட சொன்னார்கள். நாளை செய்தியாளர்களை சந்தித்து, என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் காட்டுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியாவின் இந்த பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனுடனான உறவு, மிரட்டல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்று நாளை செய்தியாளர் சந்திப்பில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
