கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படங்கள் – yahoo வெளியிட்ட பட்டியல்!

3 December 2019, 1:23 pm
Quick Share

பொதுவாக நடிகர்களின் ரசிகர்கள் பலர் தங்களது ஆசை நாயகர்களின் படம் எந்த அளவு வசூல் செய்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதனை போஸ்டர் அடித்து ஒட்டி அதில் சந்தோசப்பட்டு வருவார்கள். அதுவும் தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம். 100 கோடி 200 கோடி என ஒரு படம் வசூல் எடுத்து விட்டால் போதும் இவர்களே, கூட ஒரு 50 கோடியை அதிகமாக போட்டு கொண்டாடி வருவார்கள்.

இந்த சலசலப்புகளை எல்லாம் தீர்க்கதான் ஆண்டுதோறும் யாஹூ போன்ற நிறுவனங்கள் ஒரு சர்வே எடுத்து அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்கள் குறித்தும் அதன் கலெக்ச்சன் குறித்த விவரங்களையும் வெளியிடும். 2019 ம் ஆண்டு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தற்போது yahoo ஒரு தகவல் விவரத்தை வெளியிட்டுள்ளது. அது வெறும் இந்த ஆண்டிற்காணாது அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் வேட்டை ஆடிய படங்களின் விவரம் தான் அது.

அந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது அமீர் கான் வேற்றுகிரக வாசியாக நடித்து வெளியாகி உலக அளவில் ஹிட் அடித்த PK திரைப்படம் தான்.

அதை அடுத்து சல்மான் கான் நடிப்பில் வெளியாகிய பஜ்ரங்கி பைஜான் படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இறுதியாக அமீர் கானின் அசாத்திய நடிப்பில் வெளியாகி உலக அளவில் சுமார் 2000 கோடி வசூல் வேட்டையாடிய ”தங்கல்” திரைப்படம் முதல் இடத்தை பிடித்து சாதனை பிடித்துள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரப்போகிறவர் ரஜினி – பாரதிராஜா!

என்ன இது? சுத்த பைத்தியக்காரத்தனம்..! அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்

1 thought on “கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படங்கள் – yahoo வெளியிட்ட பட்டியல்!

Comments are closed.