வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டெல்லி கேபிடள்ஸ் பிளேயர்ஸ்!

13 April 2021, 11:30 am
Quick Share


மாஸ்டர் பட த்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். சிறுவர்கள், போதைப் பொருள் கதையை மையப்படுத்தி மாஸ்டர் படம் வெளியாகியிருந்தது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்தது. மாஸ்டர் படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.


குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் வைரலானது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டான்ஸ் ஆடிய வீடியோவை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இவ்வளவு ஏன், கிரிக்கெட் பிரபலங்கள் கூட வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வந்தனர்.


இந்த நிலையில், தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணியின் ரிஷப் பண்ட், ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், அஜின்க்ய ரகானே, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை டெல்லி கேபிடள்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதே போன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வார்னர், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இதனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 55

0

0