எப்போதும் இளமையா இருக்கணுமா..? அழகின் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை தேவயாணி..!

Author: Vignesh
17 February 2023, 3:14 pm

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோல் சீரியல் என நடித்து வருபவர்.

நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு என அடக்கவுடக்கமான குடும்ப பெண்ணாக நடித்து வந்தார். சிவசக்தி என்ற ஒரு படத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறி நடித்தார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு தேவயானி கிளாமரில் ஆட்டம் ஆடியிருப்பார்.

Devayani - Updatenews360

ஆனால் அப்படம் வெற்றியடையாமல் தோல்வியை சந்தித்ததோடு தேவயானிக்கு பெரிய மார்க்கெட் இழப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் சேலை, தாவணி கட்டி நடித்து கிளாமருக்கு நோ கூறி நடிக்க தொடங்கினார்.

பேட்டியொன்றில் பங்கேற்ற இந்த வயதிலும் தேவயாணி எப்படி அழகாக இருக்கிறார் என்று கேள்விக்கு இதற்கெல்லாம் தாய் தந்தையின் ஆசியும் கடவுளின் அனுக்கிரகமும் தான் காரணம் என்கிறார்.

Devayani - Updatenews360

மேலும், தேவயாணி எப்போதும் டயட் எல்லாம் இருந்தததில்லையாம், எண்ணெய் உணவுகளையும், துரித உணவுகளையும் உட்கொள்வதில்லையாம் மாறாக எவ்வளவு நேராமானாலும் வீட்டில் சமைத்த உணவுகளைதான் தேவயாணி அதிகம் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

தன் உடலையும் கட்டுக்குள் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தினமும் நடைப்பயிற்சி செய்வாராம், மேலும் தேவயாணி வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வாராம், நிறைய மாடிப்படிகளை ஏறி இறங்குவதாக தெரிவித்துள்ளார்.

Devayani - Updatenews360

மேலும் தேவயாணி எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களுக்கு என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்றும், பெண்கள் தான் வீட்டிற்கு எல்லாமே அதனால் உங்களுக்கு என்று குறைந்தது 1/2 அல்லது 1 நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்துள்ளார்.

devayani - Aupdatenews360AC

மேலும், தான் எப்போதும் என்தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மாத்திரம் தான் பயன்படுத்துவதாகவும், தேங்காய் எண்ணெய் எல்லாவற்றிற்கும் உதவும் அதனால் பயப்படாமல் பயன்படுத்தலாம் என கூறியுள்ளார்.

மேலும், தினமும் சந்தோசமான இருக்க வேண்டும் என்றும், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் உனவும், எப்போது நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என தேவயாணி பகிர்ந்து உள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?