தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் – கடைசி முயற்சியில் இறங்கிய ரஜினி..!

Author: Rajesh
6 February 2022, 7:07 pm

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் கருத்து வேறுபாடு பிரிவதாக அறிவித்த நிலையில், இருவரது பிரிவு குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் கசிந்து வருகி;ன்றன. இதனையடுத்து உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஐஸ்வர்யாவிடம் ரஜினி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தாகவும் அதன்பிறகு ஐஸ்வர்யா அப்பாவின் பெயரை காப்பாற்ற தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம்.

இருந்தாலும் தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஜினி, பேரன்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி, தனுஷிடம் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடபோகிறாராம். ரஜினி இந்த முயற்சி கைகொடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!