தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைவதற்கு சாத்தியமே இல்ல… தனுஷின் ட்விட்டர் பதிவில் புதிய ட்விஸ்ட்…!

Author: Rajesh
17 March 2022, 7:04 pm

நடிகர் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து, சமூக வலைதளங்களில் இருவரும் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் பரவி வருகிறது. இவர்கள் பிரிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், இவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகிறார்கள். சில நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகியதே இவர்களின் விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.  

இருந்தாலும் பிரிந்ததற்கான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை , தற்போது படப்பிடிப்பில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். ரஜினிக்காக ஐஸ்வர்யா, மீண்டும் கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்த உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டாராம்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது கவனத்தை திருப்ப, மியூசிக் வீடியோ இயக்குவதில் நாட்டம் செலுத்தினார். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இசை ஆல்பத்தை இயக்கி வருகிறார். தமிழில் இதற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

Aishwarya Dhanush pens memoir on her life as Superstar Rajinikanth's  daughter

இந்தப் பாடலை நடிகரும், தந்தையுமான ரஜினி இன்று வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “எனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பயணி’ பாடலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக களம் கண்ட அவர் வெற்றி பெற வேண்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வரும் பயணி இசை ஆல்பத்தை பதிவு செய்து வாழ்த்துக்கள் தோழி, கடவுளின் ஆசி என்றும் உண்டு என பதிவு செய்துள்ளார். தோழி எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதால் இருவரும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!