ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி ! இனி அதிரடி சரவெடிதான்.

By: Poorni
16 October 2020, 12:27 pm
Quick Share

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தனுஷ் கை ஆள, இயக்கம் மட்டும் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது. ஒரு சிலர் சமூக வலைதளங்களில் சில இசை அமைப்பாளர்களின் பெயர்களை கூறியிருந்தனர்.

ஆனால் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் நம்ம தனுஷ்-அனிருத் ( DnA ). இவர்கள் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்தனர், ஆனால் நடுவில் எதோ சின்ன பிரச்சனையில் இவர்களது கூட்டணியில் படமே வெளியாகவில்லை.

இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஸ்பெஷல் நாளில் தனுஷின் 44வது படத்திற்கு அனிருத் தான் இசை என அறிவித்துவிட்டார்கள்.

Views: - 43

0

0