20 கோடி கொடுங்க- வெற்றிமாறனிடம் கண்டிஷன் போட்ட தனுஷ்! சிம்பு படத்தில் திடீர் மாற்றம்?
Author: Prasad28 June 2025, 5:33 pm
வடசென்னை 2?
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் 2018 ஆம் ஆண்டு வெளியான “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து “வடசென்னை 2” திரைப்படத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பல வருடங்களாகியும் அத்திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை.
தனுஷும் வெற்றிமாறனும் பொது விழாக்களில் கலந்துகொள்ளும்போது ரசிகர்கள் பலரும் “வடசென்னை 2” அப்டேட் குறித்து எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இருவரும் “வடசென்னை 2 வரும்” என்று மட்டும் பதில் அளிப்பார்கள்.

இந்த நிலையில் வடசென்னை பின்னணியில் வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என தகவல் வெளிவந்தது. இத்திரைப்படம் “வடசென்னை 2” ஆக இருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்திரைப்படம் வடசென்னை பகுதியை பின்னணியாக கொண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது.
20 கோடி கொடுங்க
சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் தனுஷை சந்தித்து, சிம்புவை வைத்து தான் ஒரு படம் இயக்கப்போவதாகவும் அதில் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்ற சில விஷயங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் எனவும் கேட்டிருந்தாராம். அதற்கு தனுஷ், “தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என கூறியிருக்கிறார்.
ஆனால் திடீரென தற்போது வெற்றிமாறனுக்கு ஃபோன் செய்த தனுஷ், “நீங்கள் வடசென்னையில் இருந்து என்ன வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் தயாரிப்பாளரை ஒரு 20 கோடி ரூபாய் எனது வங்கி கணக்கில் செலுத்த சொல்லிவிடுங்கள்” என கூறிவிட்டாராம். இதன் காரணமாக சிம்பு படத்தின் கதையையே மாற்றிவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.