சக நடிகரின் சிகிச்சைக்காக தனுஷ் செய்த மிகப்பெரிய நிதியுதவி? நெகிழ்ச்சி சம்பவம்…
Author: Prasad12 August 2025, 1:28 pm
தனுஷுடன் நடித்த சக நடிகர்
தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநய். அத்திரைப்படத்தை தொடர்ந்து “ஜங்சன்”, “தாஸ்” என பல திரைப்படங்களில் நடித்தார் அவர். கடைசியாக அவர் சந்தானத்தின் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தனக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அபிநய். மேலும் தன்னை தன் குடும்பத்தினர் கைவிட்டுவிட்டதாகவும் மேற்படி சிகிச்சைக்கு பணம் தேவை எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
தேடி வந்து உதவிய தனுஷ்
சில நாட்களுக்கு முன்பு KPY பாலா நடிகர் அபிநய்யின் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். இது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அபிநய்யின் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் தனுஷுடன் அபிநய்யும் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது தனுஷ் அபிநய்யின் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
