டார்ச்சர் தாங்கல..! ஐஸ்வர்யா குறித்து புலம்பி தள்ளிய தனுஷ்! பிரிவிற்குக்கு அச்சாரமே இந்த விஷயம் தான் போலயே..!

Author: Vignesh
2 March 2023, 10:30 am
Quick Share

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

Aishwarya Dhanush - Updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

aishwarya dhanush - updatenews360

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தின் ஒரு விழாவில் தனுஷ் பேசிய போது, தன் மனைவி மீதான கம்ப்ளைன்ட்களை அடுக்கடுக்காக அடுக்கி கொண்டே போனார்.

அதாவது படத்தின் மொத்த, அதிகாரம் இயக்குனர் என்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யா தன்னை ரொம்ப டார்ச்சர் செய்தார் எனவும், சும்மா எடுத்ததற்கு எல்லாம் இங்க வா, அங்க போ என தன்னை அலைக்கழித்தார் எனவும், கிண்டலாக தெரிவித்தார். ஆனால் ஐஸ்வர்யா இதெல்லாம் சுத்தமாக இல்லை, என அவர் முன்பாக அதை மறுத்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 3 படத்திலிருந்து தான் தனுஷ் ஐஸ்வர்யா விரிசல் அதிகமாக ஆரம்பித்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட விவாகரத்துக்கு அச்சாரம் போட்டது இந்த படம் தான் என்றும் சந்தேகிக்க தோன்றுவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. தற்போது இது சார்ந்த வீடியோ ஒன்று, சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1225

20

13