லண்டனில் தனுஷ் செய்த தரமான சம்பவம்…காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி…!

Author: Selvan
8 December 2024, 6:04 pm

தனுஷின் சர்வதேச வரவேற்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வரும் தனுஷ்,தற்போது சர்வதேச அளவிலும் பெரும் புகழை பெற்றுள்ளார்.தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் போன்ற பல மொழி திரையுலகிலும் தனக்கென தனியிடம் உருவாக்கி வருகிறார்.

Dhanush International Fame

தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.தெலுங்கில் அவர் நடித்த வாத்தி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சர்வதேச அளவில் அவர் நடித்த The Extraordinary Journey of the Fakir மற்றும் The Gray Man திரைப்படங்கள் அவரை ஹாலிவுட் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தின.

இதையும் படியுங்க: “என் ஆயுள் ரேகை நீயடி”..ஜி.வி பாடியதை ரசித்த சைந்தவி…உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் தனுஷ் ஒரு ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவில் பங்கேற்க லண்டன் சென்றார்.அங்கு அவர் க்ளீன் ஷேவ் செய்து 18 வயது இளைஞரின் தோற்றத்தில் காணப்பட்டார்,இது சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகர்களின் ஆதரவு

தனுஷை பார்க்க திரண்டிருந்த தமிழ் மற்றும் பிற மொழி பேசும் ரசிகர்கள், “நாங்கள் வெறித்தனமான ரசிகர்கள் இல்லை, கொலை வெறித்தனமான ரசிகர்கள்” என்று தெரிவித்தனர். ரசிகர்களின் வரவேற்பை கண்டு நெகிழ்ந்த தனுஷ்,அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ரசிகர்களுக்காக ராயன் படத்தின் உசுரே நீ தானே பாடலை பாடிய தனுஷ், அங்கிருந்தவர்களின் மனதை வென்றார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!