மீனாவுக்கு திருமண தேதியை பிக்ஸ் செய்த குசும்பர்கள்.. ஒரு வதந்தி எப்படி எல்லாம் டிசைன், டிசைனாக பரவுது..!

Author: Vignesh
31 March 2023, 3:30 pm

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் கணவரை இழந்த 46 வயதான நடிகை மீனாவை, மனைவியை பிரிந்துவிட்ட தனுஷ் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என செய்திகள் வெளியானது.

Dhanush Aishwarya - Updatenews360

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், அண்மையில் தான் மீனா 40 function நடைபெற்றது அதில் ரஜினி கலந்துக்கொண்டு மீனாவின் திரைப்பயணத்தை வாழ்த்தினார்.

meena - updatenews360 3

அப்படியிருக்கும் போது மீனா நிச்சயம் தனுஷை திருமணம் செய்ய மாட்டார். அதுமட்டுமல்லாது மீனாவுக்கும் ரஜினிகாந்துக்கும் நெருக்கமான மகள் – தந்தை தொடர்பு இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் பழகி வருகிறார்கள். எனவே மீனா ரஜினி உடனான உறவை கொச்சைப்படுத்தமாட்டார் என பயில்வான் யூடியூப் சேனல் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

bayilvan ranganathan - updatenews360.png h

பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்ட தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் கோபம் அடைந்து அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தார்கள். இந்நிலையில் தனுஷுக்கும், மீனாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் என தற்போது வதந்தி பரவியிருக்கிறது.

meena

இதை பார்த்த ரசிகர்களோ, இதுக்கு பயில்வான் ரங்கநாதனே பரவாயில்ல போல. அவராவது திருமணம் என்று மட்டும் தான் சொன்னார். ஆனால் சில டுபாக்கூர்கள் திருமண தேதியை அறிவித்து விட்டார்கள்.

மீனாவின் வளர்ச்சி பொறுக்காமல் தான் யாரோ அவரை பற்றி வதந்தி கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்றும், அதை எல்லாம் கண்டுக்காதீங்க மீனா எனவும், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!