கமல்ஹாசனை ஓரங்கட்டிவிட்டு பாக்ஸ் ஆஃபீஸை திணறடித்த தனுஷ்? குபேராவின் மாஸ் கலெக்சன்!

Author: Prasad
25 June 2025, 3:44 pm

மாஸ் காட்டிய குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான “குபேரா”  திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை என்றாலும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா போன்ற பகுதிகளில் “குபேரா” திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தனுஷின் நடிப்பை பல தெலுங்கு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். தெலுங்கு சினிமாவில் தனுஷிற்கு இது மிகப்பெரிய ஓபனிங் என்று கூறப்படுகிறது. 

dhanush over take kamal haasan movie collection by kuberaa movie

100 கோடியை தொட்ட குபேரா!

இந்த நிலையில் தனுஷின் “குபேரா” திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வெளியான ஐந்து நாட்களிலேயே இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது. 

dhanush over take kamal haasan movie collection by kuberaa movie

கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளிவந்த கமல்ஹாசனின் “தக் லைஃப்” திரைப்படம் உலகளவில் ரூ.90 கோடியே வசூல் செய்துள்ளது. ஆனால் “குபேரா” திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி கலெக்சன் செய்து “தக் லைஃப்” படத்தை ஓவர்டேக் செய்துள்ளது. 

dhanush over take kamal haasan movie collection by kuberaa movie

தனுஷ் அடுத்ததாக “இட்லி கடை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஹிந்தியில் “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் “லப்பர் பந்து” இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்திலும்  ஒரு திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!
  • Leave a Reply