நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?
Author: Prasad21 June 2025, 5:57 pm
3 மணி நேரத் திரைப்படம்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டினாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சொத்தப்பியது ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.
“குபேரா” திரைப்படம் முதலில் மூன்று மணிநேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக எடிட் செய்யப்பட்டு இருந்ததாம். அதன் பின் இறுதியாக மூன்று மணிநேரமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டதற்கு தனுஷ்தான் காரணம் என கூறப்படுகிறது.

இது வேலைக்கே ஆகாது!
அதாவது இயக்குனர் சேகர் கம்முலா மூன்று மணிநேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக இதனை வெளியிடலாம் என்ற முடிவில் இருந்தாராம். கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டராக வெற்றிபெற்ற “புஷ்பா 2” திரைப்படம் கூட 3 மணி நேரத்தையும் கடந்து ஓடக்கூடிய திரைப்படம்தான், ஆதலால் “குபேரா” படத்தையும் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக வெளியிடலாம் என சேகர் கம்முலா கூறினாராம்.
அதற்கு தனுஷ், “தமிழ்நாட்டில் இதெல்லாம் எடுபடாது. தயவுசெய்து படத்தின் நீளத்தை குறையுங்கள்” என்று கேட்டுக்கொண்டதற்கு பிறகுதான் சேகர் கம்முலா “குபேரா” திரைப்படத்தை மூன்று மணிநேரம் குறைத்தாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இத்தகவல் வெளிவந்த நிலையில் 3 மணி நேரம் ஓடக்கூடிய “குபேரா” திரைப்படமே ரசிகர்களின் பொறுமையை சோதித்தது, ஒருவேளை மூன்றரை மணிநேர திரைப்படமாக வெளிவந்திருந்தால் ரசிகர்களின் நிலைமை என்னவாகிருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு தனுஷிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.
