வித்யாசமான கெட்டப்பில் தனுஷ்…. பான் இந்தியா படமாக உருவாகும் D51!

Author: Rajesh
31 January 2024, 10:01 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

dhanush - updatenews360

அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 51வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அலிபிரி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இப்படத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறாராம். முழுக்க முழுக்க மும்பை தாராவி பகுதியை சுற்றி நடக்கும் கதைக்களமாக இருக்கும் என்றும், அதனால் படத்திற்கு தாராவி என்று பெயரிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!