அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

6 February 2021, 10:52 pm
Quick Share

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் டி43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு அமெரிக்கா செல்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் கர்ணன். இந்தப் படத்தில் தனுஷூடன் இணைந்து, யோகி பாபு, லால் ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜகமே தந்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறதா? அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகிறதா என்பது குறித்து படக்குழுவினர் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. இந்தப் படங்களைத் தொடர்ந்து தன்ஷ் தற்போது டி43 படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மேலும், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில், தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைகிறது.
இதையடுத்து, தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு 2 மாதங்கள் நடக்கும் முதல்கட்ட படப்பிடிப்பில் நடிக்கிறார். தி க்ரே மேன் படத்தை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இயக்கத்தில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0