அஜித் ஒரு மாதிரியான டைப்.. இப்படிதான்னு சொல்லவே முடியாது, உண்மையை உடைத்த இயக்குனர்..!

Author: Vignesh
16 December 2023, 4:55 pm

நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் youtube சேனல் ஆரம்பித்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து நட்சத்திரங்கள் சம்பந்தமான சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி பிரகாஷ்ராஜ் மீனா நடிப்பில் வெளியான தயா படத்தில் இயக்குனர் தயா செந்தில், சித்ரா லட்சுமணியின் பேட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் பல விஷயங்களை பகிர்ந்தார்.

Chitra Lakshmanan - updatenews360

சூர்யாவுக்கு எழுதிய கதையை ஸ்ரீகாந்த்-க்கு கூறி போஸ் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அத்துடன் சிட்டிசன், உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் உதவி இயக்குனராக இருந்து வேலை செய்திருப்பதாகவும், சிட்டிசன் படத்தில் வேலை செய்திருந்தபோது பாதையில் வெளியில் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ajith

மேலும், ஒரு பக்கம் இயக்குனர் அகத்தியன் ஒரு கேரக்டர் என்றால், அஜித் வேறு மாதிரியாக இருப்பார். அஜித்தை யாராலும் அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது. அவர் ஒரு டைப், எப்போதும் எதார்த்தமாக சாதாரணமாக இருப்பார். திடீரென அவர் எடுக்கும் முடிவு வேறு மாதிரியாக இருக்கும். ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை பார்த்து கவலைப்படாமல் பைக்கை எடுத்து ரைடு சென்று விடுவார். இரண்டு வருஷம் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருப்பார். மார்க்கெட் பற்றி கவலைப்பட மாட்டார். அடுத்த படத்திற்கு போய்விடுவார் என்று இயக்குனர் செந்தில் அஜித் குறித்து தெரிவித்துள்ளார்.

  • santhanam new movie directed by gvm இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!