கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தளபதி – தீனா புகைப்படம்!

2 February 2021, 1:51 pm
Quick Share


மாஸ்டர் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மாஸ்டரிலிருந்து அன்பு என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், கேபிஒய் தீனா, ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும், உலகம் முழுவதிலும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கும் அதிகமாகவே வசூல் அள்ளியுள்ளது.

மாஸ்டர் படம் திரைக்கு வந்த நிலையில், ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் கடந்த 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதோடு, இணையதளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியானது. அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியானால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும், 10 சதவிகிதம் கூடுதலாக ஷேர் வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, மாஸ்டர் படம் 3ஆவது வாரத்தில் திரையரங்கில் வசூலிக்கும் பணத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று அனைவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்த KPY தீனா, மாஸ்டர் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியின் போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நடக்கும் காட்சியின் போது எடுக்கப்பட்ட தளபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு Love From Master என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0