இது புரொமோஷன் வீடியோதான்! உண்மை இல்ல- தோனி ரசிகர்களின் தலையில் குண்டை போட்ட கும்பல்? 

Author: Prasad
10 September 2025, 4:14 pm

சினிமாவில் தோனி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி  “Dhoni Entertainment Pvt Ltd” என்ற பெயரில் ஒரு பட தயாரிப்பு  நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தை அவரது மனைவி சாக்சி தோனி நிர்வகித்து வந்தார். அந்த வகையில் முதல் திரைப்படமாக தமிழில் “LGM” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதில் ஹரீஷ் கல்யாண், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. தோனியின் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது வரை எந்த திரைப்படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவில்லை. 

எனினும் தோனி சினிமாவில் நடிக்கவுள்ளதாக பலரும் கூறி வந்தனர். அந்த வகையில் தோனி மாதவனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. 

Dhoni new movie the chase teaser released

தி சேஸ்

தோனி, மாதவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு “தி சேஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை வாசன் பாலா என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பாலிவுட்டில் உருவாகியுள்ளது.

இந்த டீசரை தோனி ரசிகர்கள் பலரும் ஆவலோடு பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, இத்திரைப்படத்தின் புரொமோஷன் வீடியோவில் மட்டுமே தோனி நடித்துள்ளார், இத்திரைப்படத்தில் அவர்  நடிக்கவில்லை” என கூறி தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனராம். எனினும் தோனி உறுதியாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் டீசர் இதோ…

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!