மாரி செல்வராஜ் இன்னொரு அட்லீயா? நம்பிக்கை இழந்த ரசிகர்கள் – சர்ச்சையில் சிக்கிய ” வாழை “!

Author:
29 August 2024, 10:57 am

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ம் தேதி வெளியான திரைப்படம் தான் வாழை. முன்னதாக மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தி தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியாக பெயரெடுத்தார்.

தற்ப்போது அவரது இயக்கத்தில் வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

mari selavraj

இப்படி வசூல் ரீதியாகும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கும் வாழை திரைப்படம் தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கிருக்கிறது. ஆம் பிரபல எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய படத்தை திருடி மாரி செல்வராஜ் வாழை படத்தை எடுத்து இருப்பதாக தற்போது கூறப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய “வாழையடி” என்ற சிறுகதையை அச்சு ஊடகத்தில் வந்தது.

அந்த கதையை தற்போது மாரி செல்வராஜ் சினிமா என்ற காட்சி ஊடகத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் என எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார். இவர் சாகித்திய அகடாமி விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய எழுத்தாளர் இந்த கதை திருட்டு புகாரை கூறி இருப்பதால் இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து எழுத்தாளர் சோ. பதிவிட்டுள்ளதாவது,

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய”வாழையடி……”என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள் ,சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.

இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச் சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி”என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. “வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்.” என்னை வாழை வாழ வைக்கவில்லை என கூறியுள்ளார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!