“என்னை கல்யாணம் பண்ணிக்கங்க…” – ரசிகர்களுக்கு மீனா OK சொன்னாரா ? மீனா கொடுத்த பதில்…!

5 July 2021, 9:05 am
Meena - Updatenews360
Quick Share

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 25 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் முக்கால்வாசி முடிந்துவிட்டது.

இப்போது இவர் தான் பாபநாசம் 2 படத்தில் கௌதமி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் Live Chat வந்தார். அதில், நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் “பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலாக, ” அதை கமல் சார் கிட்டதான் கேக்கணும்”… என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், “தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என எழுப்பிய கேள்விக்கு “நீங்கள் கொஞ்சம் லேட்…” என யாரும் எதிர்பாராத வண்ணமாக மிகவும் கூலாக பதிலளித்து, தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Views: - 326

0

0