விதியை மீறி செல்போன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட ரியோ – வைரலாகும் செல்போனில் பேசும் புகைப்படம்

14 January 2021, 11:08 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சற்று நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் ரியோ செல்போன் பயன்படுத்தியுள்ளார் என்ற ஒரு புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். கடந்த மூன்று சீசன்களாக அருமையாக ஓடிக்கொண்டிருந்த பிக் பாஸ் இந்த சீசன் கொஞ்சம் அதிகமாய் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையில் போய்க்கொண்டிருக்கிறது.

ரியோ பாலாஜி ஆரி ரம்யா பாண்டியன் கேப்ரியல் சோம் சேகர் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர அனைவரும் வெளியேறி இருக்கும் நிலையில், தற்போது கடைசி வாரம் என்பதால் அவர்கள் guestகளாக மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு பிக் பாஸ் ஒரு வீடியோ போட்டு காட்டும் பொழுதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ரியோ செல்போன் பயன்படுத்தினார் என்பது தான் அந்த சம்பவம். பலர் அது மைக் பேட்டரி என்று கூறினாலும் இதற்கு முன் சோம் சேகர் ஒரு முறை கமல்ஹாசன் பேசும்பொழுது செல்போன் பயன்படுத்தினார் என்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது.

இதைத்தொடர்ந்து ரியோவும் தற்போது செல்போன் பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது உண்மைதானா இல்லை பிக்பாஸின் டிஆர்பி காக வெளியிடப்பட்ட புகைப்படமா என நெட்டிசன்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர்.

Views: - 11

0

0