நடிகையுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ரூ.2 லட்சம் கொடுத்தாரா விஜய் சேதுபதி? அதிர்ச்சியில் கோலிவுட்!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2025, 10:59 am
தமிழ் சினிமாவில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் கலாச்சாரம் சமீப காலமாக இருந்து வந்தாலும், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது. ரம்யா மோகன் என்ற பெண் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அந்த பகீர் புகாரை கூறியுள்ளார்.
அதில் எனக்கு தெரிந்த பரிட்சயமான ஒரு பெண்ணை, நடிகர் விஜய் சேதுபதி கேரவனுக்குள் அழைத்து செல்ல ரூ.2 லட்சமும், துஷ்பிரயோகம் செய்ய ரூ.50000 கொடுத்திருக்கிறார்.
அந்த பெண் தற்போது மனரீதியாக பாதிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ள ரம்யா மோகன் சிறிது நேரத்தில் இந்த பதிவை நீக்கியுள்ளார்.

இது குறித்து பலரும் உண்மையா என கேட்ட போது, பலர் உண்மையை ஒப்புக்கொள்வதை விட இது உண்மையா என்றுதான் ஆராய்கிறார்கள், பாதிக்கப்பட்டவரை குறை சொல்வதும், ஆதாரத்தை கேட்பதும் என்று கவனத் திருப்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை பற்றி யாரும் புரிந்து கொள்வதில்லை என பதிவிட்டுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் இருந்து பதில் வந்தால் தான் உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவரும்.
