மீண்டும் தினேஷ் உடன் வெடித்த சண்டை.. ஷூட்டிங்கை கேன்சல் செய்து வெளியேறிய விசித்ரா..!

Author: Vignesh
30 January 2024, 5:00 pm

பிக் பாஸ் 7 பொருத்தவரை விதிமுறை மட்டும் இன்றி போட்டியாளர்களும் சற்று வித்தியாசமாக தான் இருந்தார்கள். இந்நிலையில், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான அண்டா காகசம் 2 ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

vichithra dinesh

அதில், பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் தான் வந்திருந்தனர். தினேஷ், விசித்ரா உட்பட பலபேர் கெஸ்ட் ஆக வந்திருந்தனர். மொத்தம் இரண்டு டீம்களாக பிரிந்து தான் கலந்து கொள்ள வேண்டும். விசித்ராவின் எதிரணியில் தான் தினேஷ் இருப்பார் என டீம் சொல்லி இருக்கிறது.

அவர் என்னுடைய டீமில் தான் இருக்க வேண்டும் என விசித்திரா கண்டிஷன் போட்டாராம். இது பற்றி தினேஷ் உடன் டீம் பேசிய போது, அவர் ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மோசமாக பேசினார்.

vichithra dinesh

இப்போது, அவர் அருகில் ஒரே டீமில் இருப்பது சரியாக இருக்காது என தினேஷும் மறுத்துவிட்டாராம். தினேஷ் மறுத்துவிட்டநிலையில், விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்று விட்டாராம். இது Fun நிகழ்ச்சி தான் எந்த டீம் என்பது பிரச்சனை இல்லை என அவர்களும் சமாதானப்படுத்தியும் விசித்ரா நிகழ்ச்சி நடத்தும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டார் என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!