தமிழ், கன்னடம் பேசுபவர்கள் கெட்டவர்களா..? ஏஆர் ரகுமான் போன்றோருக்கு தயக்கம் ஏன்…? இயக்குநர் அமீர் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
3 May 2022, 5:52 pm

இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று நடிகை சுகாசினி கூறிய கருத்திற்கு, இயக்குநரும், நடிகருமான அமீர் பதிலளித்துள்ளார்.

மதுரையில் உள்ள அலுவலகத்தில் நடிகரும், இயக்குனருமான அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பொருளியல், விஞ்ஞான மேம்பாட்டை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அழிவை நோக்கியும் சென்று கொண்டே இருக்கிறது. உலகத்தில் பல்வேறு மதத்தின் அடிப்படையில் கோட்பாடு அன்பாகவே உள்ளது. அன்புதான் தொடக்கமாக உள்ளது.

சாந்தியும், சமாதானமும் தான் முக்கிய, மனித சந்தோஷத்திற்கு மனிதநேயம் தேவை. கடவுள் பெயரால் தற்போது உயிர்ப்பலி வாங்கப்படுகிறது. மதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது ஆபத்தானது. மனிதனையும், ஆன்மீகத்தையும் அரசியல் பிரித்து விட்டது.

காலை முதலே இஸ்லாமியர் அல்லாத நண்பர்களான இந்து சமூகத்தை சேர்ந்தோர்கள் வாழ்த்து தெரிவித்தது மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தி பேசக்கூடிய மக்கள் நல்ல மக்கள் என்றால், தமிழ், கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் கெட்டவர்களா..? இந்தி தெரிந்து கொண்டால் தவறு இல்லை. சமஸ்கிருதம் கற்றால்தான் மருத்துவம் பயிலமுடியும் என்று வகுத்ததை நீதி கட்சி, திராவிட கட்சிகள் உடைத்து எரிந்துள்ளது. தற்போது மீண்டும் தலைதூக்கப் பார்க்கிறது.

திரைக்கலைஞர்களை திரையில் மட்டும் ரசிக்க வேண்டும். திரைகலைஞர்களை அரசியல் ரீதியாக அவர்களின் ரசிகர்களை அரசியல் கட்சிக்கு விற்றுவிடுகின்றனர். கலைக்கு மொழி கிடையாது. அனைத்து மொழி படங்களையும் ரசிக்கலாம். பிற மாநிலங்களில் மொழி பற்றாளர்களை காண்பிக்கும் பழக்கத்தை, தமிழ் நடிகர்கள் வியாபாரத்திற்காக பேசுவதில்லை.

உச்ச நட்சத்திரம் தமிழுக்காக பேசவேண்டும் என்று எண்ணுவதே மற்றவர்களின் குரல்கள் கவனிக்கப்படுவதில்லை. ஏ ஆர் ரகுமான் போன்று உச்ச நட்சத்திரங்கள் மொழி பற்றுடன் பேச முன்வர வேண்டும்.

கடந்த காலத்தில் இந்தி பாடலுக்கு இணையாக தமிழ் பாடல் நாடுமுழுவதும் கேட்கப்பட்டதற்கு காரணமாக இளையராஜா, ஏஆர் ரகுமான் சாதித்தார்கள். அஜய்தேவ் தாய்மொழி இந்தியே கிடையாது. ஆனால் இந்தி குறித்து இவர்களை போன்ற உச்ச நட்சத்திரங்களை பேச வைக்கிறார்கள்.

என் மொழியின் மீது மற்றொரு மொழியை திணித்தால் மொழிக்காக களத்தில் நின்று சண்டையிடுவது அவசியமாக உள்ளது, என கூறினார்

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!