அசிங்கமா இல்லை.. இப்படியா நடிகைகளை யூஸ் பண்றது.. ராஷ்மிகா பட இயக்குனரின் சர்ச்சை பேச்சு..!

Author: Vignesh
20 January 2024, 9:26 am

சந்தீப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்து வருகிறது.

தற்போது, வரை இப்படம் ரூ.1052.85 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வசூல் மேலும், அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பதிக்கலாம் என நம்பமுடிகிறது. இதனால் இனிவரும் ரன்பீர் கபூர் படங்கள் பாலிவுட் ஸ்டார் நடிகர்களையே நடுங்க வைக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.

animal

இந்நிலையில், சினிமா நடிகர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பல தகவல்களை மறக்காமல் பேசுபவர் பத்திரிகையாளர் வித்தகன் சேகர். இவர், தற்போது அனிமல் பட இயக்குனர் தன் படத்தில் நடித்த நடிகைகளை இப்படித்தான் பயன்படுத்துவேன் என்று கூறியதை விமர்சித்து பேசி இருக்கிறார். அதாவது, அனிமல் பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா என் படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் அந்த காட்சிகளில் நடிக்க சம்மதம் வாங்க முதலில் திரைக்குப் பின்னால் அவர்களுடன் நெருக்கமாக பழகுவேன், அதன் பின் தான் அந்த கெமிஸ்ட்ரியை படத்தில் பயன்படுத்திக் கொள்வேன் என்று சந்தீப் ரெட்டி வங்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

animal

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பரினீதி சோப்ரா. ஆரம்பத்தில், கமிட் ஆகி ஒரு சில காட்சிகளில் நடித்த பின் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை என்று ரன்பீர் கூறியதால், அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பின் தான் ராஷ்மிகா மந்தனா அரைகுறை ஆடையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!