Dress கழட்டு… நயன்தாராவிடம் கடுமையாக நடந்துக்கொண்ட பிரபல இயக்குனர்!

Author: Rajesh
31 January 2024, 12:24 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்த ஒரு பிளாஷ்பேக் சம்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா ஐயா படத்தில் நடித்தபோது மாடர்ன் ஆன கவர்ச்சி உடையணிந்து செட்டிற்கு வந்துள்ளார். அதை பார்த்து கடுங்கோபம் அடைந்த இயக்குனர் ஹரி ஒழுங்கா ரூமுக்கு போய் ட்ரஸ் மாத்திட்டு வாங்க…. நான் உன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறேன் தெரியுமா? இப்படத்தில் பக்கா கிராமத்து பெண் ரோல் உனக்கு. ஆனால், நீ இப்படி மாடர்ன் பொண்ணு மாதிரி வந்து இருக்கிற என முதல் நாள் ஷூட்டிங்கிலே கடுமையாக திட்டினாராம். அதன் பின் நயன்தாரா ஆடை மாற்றி வந்த பின்னர் ஹரி அமைதியனராம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!