இயக்குனர் லிங்குசாமியின் புதிய படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Author: Mari
17 January 2022, 4:12 pm
Quick Share

ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டைக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் லிங்குசாமி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. இதனிடையே, சண்டக்கோழி 2′ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தி வாரியர்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

Views: - 226

0

0