‘எப்படி பண்ணார்னு தெரியல? பொறாமையா இருக்கு’ “வாழை”படம் குறித்து மணிரத்னம் பேச்சு!

Author:
20 August 2024, 5:52 pm

வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாழை. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் மாரி செல்வராஜ்.

அடிதட்டு மக்களின் ஜாதிய அடிப்படையில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மேல் சாதியினரின் அடாவடித்தனத்தையும், ஆணவத்தையும் தோலுரித்துக் காட்டியது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்று பல பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.

இப்படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் பேசும் என கூறப்படுகிறது. தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிற 23ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்கள் முழுக்க ட்ரெண்டிங்கில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டெய்லர் வெளியீட்டு விழாவில் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் மணிரத்தினம் மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர்.

தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார் மற்ற படங்களைப் போலவே இந்த திரைப்படத்திலும் எல்லா துறைகளிலும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. அந்த கிராமத்தில் உள்ள மக்களை இத்தனை பேரை எப்படி இவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது எனக்கு தெரியவில்லை…? அதை நினைத்தாலே எனக்கு மாரி செல்வராஜ் மீது மிகுந்த பொறாமையாக இருக்கிறது. அந்த அளவுக்கு எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு தனித்திறமை இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மாரி செல்வராஜை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார் மணிரத்தினம்.

அந்த கிராமத்தில் கிராமத்தில் உள்ள மக்களை இத்தனை பேரை எப்படி இவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது எனக்கு தெரியவில்லை. அதை நினைத்தாலே எனக்கு மாரி செல்வராஜ் மீது மிகுந்த பொறாமையாக இருக்கிறது. அந்த அளவுக்கு எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு தனித்திறமை இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மாறி செல்வராஜை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார் மணிரத்தினம்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?