மக்கள் மனதில் நின்ற ‘மிஸ்டர் சந்திரமௌலி’… திடீரென மரணமடைந்த மௌன ராகம் புகழ்… சோகத்தில் திரையுலகம்!!

Author: Vignesh
14 December 2023, 2:25 pm

பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான சங்கரன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இந்த தகவல், திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மௌனராகம் படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் சந்திரமௌலியாக நடித்து அதன் மூலம் இவர் பிரபலமானார்.


தமிழில் 1974-ஆம் ஆண்டு ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து, வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட 8 படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

இயக்குனரும் நடிகருமான சங்கரன் மறைவிற்கு பாரதிராஜா எக்ஸ் வலைதள பக்கத்தில் எனது ஆசிரியர் இயக்குனர் சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!