புது வருசத்தில் 3ஆவது குழந்தைக்கு அப்பாவான செல்வராகவன்!

7 January 2021, 9:53 pm
Quick Share

இயக்குநர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் செல்வராகவன். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கவே அடுத்தடுத்து ரொமாண்டிக் கதையை வைத்து படங்கள் இயக்கினார். இவரது படைப்பில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மயக்கம் என்ன படத்தில் செல்வராகவனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு செல்வராகவன் – கீதாஞ்சலி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு ஓம்கார் என்ற மகன் பிறந்தார்.
இதையடுத்து, 3ஆவதாக தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் செல்வராகவன் கூறியிருந்தார். இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டை வரவேற்ற நிலையில், தற்போது செல்வராகன் – கீதாஞ்சலி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கீதாஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

அதோடு, குழந்தை நலமாக இருப்பதாகவும் குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0