ரெமான்டிக் ஹீரோவாகும் பிரமாண்ட இயக்குனர் மகன்..!

Author: Rajesh
26 January 2022, 2:47 pm
Quick Share

தமிழில் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து மிகப் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சங்கர். மருத்துவ படிப்பு முடித்துள்ள இவரின் இளைய மகள் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சங்கரின் மகளை தொடர்ந்து மகன் அர்ஜித்தும் தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார். அமெரிக்காவில் டைரக்சன் கோர்ஸ் படித்து, சங்கர் போல் இவரும் இயக்குனராக வலம் வருவார் என்ற நினைத்த நிலையில் தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 இல் வெளியான திரைப்படம் காதல். இப்படத்தில்
பரத்இ சந்தியா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் படத்தின் இரண்டாம் பாகத்தை பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக சங்கரின் மகன் அர்ஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 565

0

0