இயக்குனர் ஷங்கருக்கு ஹீரோயின் கணக்கா இருக்கும் மகள் ! வைரலாகும் புகைப்படம் !

11 November 2020, 8:43 am
Quick Share

ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆரம்பத்தில் இருந்து தடை மேல் தடை, சில மாதங்களுக்கு முன்பு கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.

இந்தநிலையில், 26 வருடங்களாக பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தாரின் புகைப்படங்களை பெரிதாக யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். தற்போது அவரின் மூத்த மகள் அதிதி அவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹீரோயின் கணக்காக இருக்கும் அவரின் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், நீங்களே அவங்களை ஹீரோயினாக ஆக்கி இருக்கலாமே என்றெல்லாம் ஷங்கரை TAG செய்து கேட்கிறார்கள்.

இந்த சந்தோஷம் எல்லாம் சில நொடிகளில் கடந்து போவது போல், தற்போது ஷங்கர், அவரின் மூத்த மகளான அதிதியின் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வருகிறார்.

Views: - 26

0

0