இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை திடீர் மரணம் ! கோலிவுட் இரங்கல் !

27 November 2020, 7:36 pm
Quick Share

மாஸ் மசாலா இயக்குநரான சிறுத்தை சிவா, முதலில் ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பலமுகம் கொண்டவர். சிறுத்தை என்னும் தெலுகு ரீமேக் படத்தின் மூலமாக சிறுத்தை சிவா என்றும் அழைக்கப்படுகிறார். தல அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

பின்னர் இவர் மீண்டும் தொடர்ந்து 3 படங்கள் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். விஸ்வாசம் படத்துக்கு பின் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணி பரவலாக பேசப்பட்டது. காரணம் அந்த படத்தின் வெற்றி.

அதிலும் நெஞ்சை நக்கும் அளவுக்கு சென்டிமெண்ட் காட்சிகளை மழைச்சாரல் போல தூவி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் சிவா. இப்போது அண்ணாத்த படத்தில் ரஜினியை இயக்குகிறார். இப்படி ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் சிவாவின் வாழ்க்கையில் இன்று அவரது தந்தை, ஜெயக்குமார் திடீரென்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தமிழ் சினிமா உலகம் முழுவதும் இயக்குனர் சிவாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறது.

Views: - 0

0

0