டிரெண்டிங் பாடலால் காப்பிரைட் வழக்கு? டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து இயக்குனர் தியாகராஜன் திட்டவட்டம்!

Author: Prasad
6 June 2025, 12:29 pm

மலையூரு நாட்டாமை…

தியாகராஜன் இயக்கிய “மம்பட்டியான்” திரைப்படத்தில் தமன் இசையில் உருவான “மலையூரு நாட்டாமை” என்ற பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரம் பெருகத்தொடங்கிய சமயத்தில் இருந்து டிரெண்டிங் பாடலாக வலம் வரத்தொடங்கியது. குறிப்பாக திருமண விழாக்களில் மணப்பெண் இப்பாடலுக்கு நடனமாடுவது வழக்கமாகிப் போனது. 

அந்த வகையில் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தில் ஒரு மணப்பெண் இப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்வது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.  இந்த காட்சி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 

director thiagarajan decided about the copyright strike to tourist family

காப்பிரைட் வழக்கு?

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் தியாகராஜன், “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மலையூரு நாட்டாமை பாடலை பயன்படுத்த என்னிடம் படக்குழுவினர் அனுமதி வாங்கவே இல்லை” என கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “அவர்கள் என்னிடம் அனுமதி பெறாமல் அப்பாடலை பயன்படுத்தியிருந்த நிலையில் பலரும் என்னிடம் பணம் கேளுங்கள் அல்லது அப்படத்தின் மீது வழக்கு தொடுங்கள் என கூறினார்கள். 

director thiagarajan decided about the copyright strike to tourist family

ஆனால் எனக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை. அந்த பாடல் மீண்டும் ஹிட் ஆகி இருக்கிறது. இதற்காக நான்தான் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவிற்கு பணம் கொடுக்க வேண்டும். பல வருடங்கள் ஆன பிறகும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பாடலை பயன்படுத்தியதற்காக நான் வழக்குத் தொடுக்கப்போவதில்லை. நான் இயக்கிய திரைப்படத்தின் எந்த பாடலை யார் பயபடுத்தினாலும் இனி காப்பிரைட்ஸ் கேட்கப்போவதில்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார். தியாகராஜனின் இந்த பெருந்தன்மை ரசிகர்கள் பலரையும் மெய்சிலிர்க்கவைத்துள்ளது. 

  • the reasonn behind vaadivaasal movie drop சூர்யாவுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய வெற்றிமாறன்? வாடிவாசல் டிராப் ஆனதுக்கு இதான் காரணமா?
  • Leave a Reply