சரோஜா தேவியை தொடர்ந்து பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்… திரையுலகம் அதிர்ச்சி..!!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2025, 4:34 pm
2025ஆம் ஆண்டில் பிரபலங்கள் மரணம் பலரையும் உலுக்கி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.தற்போது பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் வேலுபிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி நாளைய மனிதன் என்ற படம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
அந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அதிசய மனிதன் என்ற இரண்டாம் பாகத்தை எடுத்தார். அந்த படமும் அப்போது பெரிய அளவில் பேசப்ப்டடது.

தொடர்ந்து இயக்குநர் ஆர்கே செல்வமணியின் தயாரிப்பில் அசுரன், ராஜாளி போன்ற படங்களை இயக்கிய அவர், முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 12.20 மணியளவில் காலமனார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
