மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித்தின் பேவரைட் இயக்குனர்..!

14 April 2021, 6:22 pm
Quick Share

கடந்த பொங்கலுக்கு வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிறைந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உட்பட பல யூடியூப் நடிகர்கள் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்த இந்த படத்தில் விஜயை விட விஜய் சேதுபதிக்கு அதிக மாஸ் காட்சிகள் இருந்ததாக ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டிய மாஸ்டர் திரைப்படத்தை விஜயின் நண்பரான சேவியர் பிரிட்டோவின் நிறுவனமான XB பிலிம் நிறுவனம் அடுத்த படத்தை தயாரிக்க தயாராகி விட்டது. அடுத்து தயாரிக்கும் படத்தின் நடிகர், இயக்குனர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் பில்லா அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் படத்தை இயக்க இருக்கிறார் . நடிகர் முரளியின் மகனுமாகிய அதர்வாவின் தம்பியுமாகிய ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தின் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்களுக்கு மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

Views: - 80

3

0