விவாகரத்து ஆன பெண்கள் வாழ்வதே கஷ்டம் – மனம் திறந்த காயத்ரி ரகுராம்!

Author:
17 October 2024, 5:49 am

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருந்து வருபவர் தான் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நடன இயக்குனரான ரகுராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 ஆம் ஆண்டு காயத்ரி சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அப்பா சினிமா துறையில் இருப்பவர் என்பதால் மிகச் சுலபமாக திரைப்படத்துறையில் நுழைவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

gayathri raghuram

அதன் பிறகு சில வருட இடைவெளிக்கு பிறகு 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்களில் நடன அமைப்பாளராக தனது பணியை செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே அவர் அரசியல் கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எப்போதும் சர்ச்சைக்குரிய நபராக காயத்ரி ரகுராம் பார்க்கப்பட்டு வருவார். காரணம் தனது சமூக வலைதளங்களில் சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் எதுவானாலும் தைரியமாக தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தக் கூடியவர் நடிகை காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை காயத்திரி ரகுராம் விவாகரத்து ஆன பெண்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, விவாகரத்தான பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது .

அதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களை அணுகுவதற்கு எளிதாக இருக்கும் விஷயம் விவாகரத்து என்ற ஒரு பிராண்ட் தான். இன்னொன்று ஆண்கள் அவரை ஈசியாக தாக்கி விடலாம் என்ற நினைப்பில் இருப்பார்கள். மேலும் அந்தப் பெண் கேரக்டர் பற்றி அவதூறு பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அட்ஜஸ்ட்மென்ட் பொருத்தவரை சினிமா துறையில் மட்டுமே இல்லாமல் மற்ற எல்லா துறைகளிலும் நடக்கிறது.

gayathri raghuram

இதையும் படியுங்கள்: விஜய் படத்தை பார்த்து கால் மணி நேரத்திலே தூங்கிட்டேன்…. எந்த படம் தெரியுமா?

ஒரு பெண் விவாகரத்து பெற்றுவிட்டால் உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இச்சையான பார்வையில் தான் பார்ப்பார்கள். எனக்கு அப்பா கிடையாது ஆகையால் நான் என்னை ஒரு பெண்ணாகவும் ஒரு ஆணாகவும் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே என்னை பொறுத்தவரை பெண்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களின் பார்வையில் தவறு இருந்தால் அது அவர்களின் பிரச்சனை அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 270

    0

    0