‘பீஸ்ட்’ முதல் ‘விக்ரம்’ வரை – தீபாவளிக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பான படங்களில் இது தான் முதலிடம்..!

Author: Vignesh
3 November 2022, 4:45 pm
Sun TV TRP - Updatenews360
Quick Share

சின்னத்திரையை பொறுத்தவரை இப்போது பல புதுப்புது சேனல்கள் உருவாகி வருகிறது. அதனால் இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சேனல்கள் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் சேனல்களின் டிஆர்பியும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் பிரபல சேனல்கள் தங்கள் டிஆர்பிஐ தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக ரியாலிட்டி ஷோ, சீரியல்கள், திரைப்படங்கள் என்று புது பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது.

vikram-movie-updatenews360-1-2

இந்த வருடம் அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இதற்காக அன்றைய தினத்தில் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு தங்களது டிஆர்பி ரேட்டிங்கை எகிர விடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குதூகலப் படுத்தினர்.

அப்படி இந்த வருடம் தீபாவளி சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள் சின்ன திரையில் ஒளிபரப்பானது.

No 1 – #Beast – 12.62 – premiere
No 2 – #Viswasam – 10.27 – 10 th telecast
No 3 – #Arunachalam- 9.21
No 4 – #Doctor- 6.97 – 5 th telecast
No 5 – #Vikram – 4.42 – Premiere
No 6 – #Don – 3.63 – Premiere

அதில், இந்த வருடம் தளபதி விஜய்யின் நடிப்பில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன பீஸ்ட் படம்தான் சன் டிவியில் ஒளிபரப்பானது. படம் ரிலீஸ் ஆன சில மாதத்திலேயே சன் டிவியில் அதை ஒளிபரப்பு செய்தது ரசிகர்களிடம் மேலும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அதேசமயம் சன் டிவி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து கெத்து காட்டி உள்ளது.

Views: - 192

0

0