விஜய்யின் GOAT படத்தில் முதலில் நடிக்க இருந்த நட்சத்திர நடிகர்…. யார் தெரியுமா?

Author:
29 August 2024, 1:27 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இப்படத்தின் மூன்று பாடல்கள் படத்தின் டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்க செய்தது.

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அடுத்த வாரம் 5ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், GOAT படத்தை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக தேர்வு செய்தது நடிகர் தனுஷை தானாம்.

அதைவிட காட்டிலும் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவரது மகன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வைக்க வெங்கட்பிரபு நினைத்திருந்தாராம். ஆனால் டீ ஏஜிங் குறித்து விஷயங்கள் வெங்கட் பிரபுவிற்கு தெரியவர, அதன் பின்னர் கோட் படத்தின் கதையை தளபதி விஜய்க்கு கூறியுள்ளார். இப்படி தான் GOAT படம் துவங்கியது என தகவல் கூறப்படுகிறது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…